தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரதமர் மோடியின் சகோதரர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் - மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

SPECIAL DHARISAN

By

Published : Aug 4, 2019, 12:49 PM IST

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி, சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை வந்திருந்தார். அவருடன் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, அரசு உயரலுவலர்கள் ஆகியோர் வந்திருந்தனர். மேலும் சுவாமி தரிசனம் செய்ய வந்த பங்கஜ் மோடிக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி

பின்னர் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் ஆகியோரை சிறப்பு தரிசனம் செய்த பங்கஜ் மோடி, அதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள பொற்றாமரை குளம் அருகே சிறிது நேரம் அமர்ந்து அவருடன் வந்திருந்த அனைவரிடமும் உரையாற்றினார். பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

பிரதமர் மோடியின் சகோதரர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்

பிரதமர் சகோதரர் பங்கஜ் மோடி மீனாட்சி அம்மன் கோயில் வருகையையொட்டி கோயிலைச் சுற்றிலும் காவல் துறையினர் சார்பில் சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details