தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தெப்பத் திருவிழா: தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் - திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா

மதுரை: திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

therottam festrival
therottam festrival

By

Published : Feb 3, 2020, 2:51 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா ஜனவரி 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, முருகன் தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்பரத்திலும் மாலையில் தங்கக் குதிரை, தங்க மயில் ஆகிய வாகனங்களிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பமூட்டு தள்ளுதல், தை கார்த்திகை தினமான இன்று ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி தெய்வானையுடன் பதினாறு கால் மண்டபத்திலுள்ள சிறிய தேரில் எழுந்தருளினார்.

therottam festrival
அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர். அப்போது, பொதுமக்களுக்கு முருகன் - தெய்வானை அருள்பாலித்தனர்.இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன் தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: 'விவசாயின்னா பிரச்னை இருக்கத்தான் செய்யும்' - நடிகர் அப்புகுட்டி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details