தமிழ்நாடு

tamil nadu

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை புதிய மார்க்கமாக அறிவிக்க உயர்மட்ட குழுவை அமைக்கக் கோரி வழக்கு!

By

Published : Dec 9, 2020, 6:05 PM IST

மதுரை : வள்ளலாரின் சுத்த சன்மார்க்க தனி நெறியை புதிய மார்க்கமாக அறிவிப்பதற்கான கருத்துரைகளை பெற உடனடியாக உயர்மட்ட குழுவை அமைக்கக் கோரி மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

petiton seeks to declare Vallalar's pure morality as a seperate religion
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை புதிய மார்க்கமாக அறிவிக்க உயர்மட்ட குழுவை அமைக்கக் கோரி வழக்கு!

உருவ வழிபாட்டை மறுத்து அருட்பெருஞ்சோதியை இறையாக்கிய சுத்த சன்மார்க்க தனி நெறியை புதிய மார்க்கமாக அறிவிப்பதற்கான கருத்துரைகளை பெற உடனடியாக உயர்மட்ட குழுவை அமைக்கக் கோரி மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த ராமலட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், “வள்ளலாரின் கொள்கைகள் பெருமளவில் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றன. அவரது சுத்த சன்மார்க்கம் என்னும் நெறியை பலரும் பின்பற்றும் சூழலில் அவற்றைப் பின்பற்றி பல இடங்களில் தர்ம சாலைகள் அமைக்கப்பட்டு விலையில்லா உணவுகள் வழங்கப்படுகின்றன.

வடலூரில் தெய்வ நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 1867 ஆம் ஆண்டு முதல் அணையா அடுப்பு அமைக்கப்பட்டு தொடர்ந்து அணையா வண்ணம் பராமரிக்கப்படுகிறது. இந்த சூழலில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகும் அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இது தொடர்பான கருத்துரைகளை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு உயர்மட்ட குழுவை அமைப்பதாக தெரிவித்து இருந்தது.

ஆனால், அதன் பின் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது வரை அதுபோல உயர்மட்டக்குழு எதுவும் அமைக்கப்படவில்லை. அதனை நினைவூட்டும் வகையில் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

எனவே, வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாகவும், புதிய மார்க்கமாகவும் அறிவிப்பதற்கான கருத்துரைகளை பெற உடனடியாக உயர்மட்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவானது, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (டிச.8) விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க :கூவம் கரைவாழ் மக்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details