மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மருத்துவக் கல்லூரி கலந்தாய்வை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் 85 விழுக்காடு இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 விழுக்காடு இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 27 ஆயிரத்து 44 இடங்கள் தமிழ்நாடு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 126 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநகரத்தின் செயலர் 2019- 2020ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கி, புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.