தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருத்துவ கலந்தாய்வில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கல்லூரிகளையும் சேர்க்க கோரி மனு...! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: 2020-21ஆம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு பட்டியலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சேர்க்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Nov 28, 2020, 3:31 PM IST

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வாசுதேவா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "2020-21ஆம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு பட்டியலில், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல் உள்பட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளும் சேர்க்கப்படும் என செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மேலும், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. ஆனால், 2020-21ஆம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டன. தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு பட்டியலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை சேர்க்கவில்லை.

இந்த கலந்தாய்வில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்தால், மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீடு விழுக்காடு அதிகரிக்கும். இதனால் பெரும்பாலான மாணவர்கள் பயனடைவர். எனவே, 2020-21ஆம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு பட்டியலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details