மதுரை மேலமடை எம்.ஜி.ஆர் தெருவில் மாரிஸ்வரி-கணேசன் தம்பதி வசித்துவருகின்றனர். அவர்களின் முதல் குழந்தையான கீர்த்தனா மனவளர்ச்சி குன்றியவர். அந்தச் சிறுமியை 14 ஆண்டுகளாக வளர்த்துள்ளனர்.
இதற்கிடையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால், பலமுறை சிறுமியை மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் அனுமதிக்க முயற்சித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவந்துள்ளனர். அப்படி 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் பயனில்லை.
அதைத்தொடர்ந்து தற்போது மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் புதூர் பகுதியில் உள்ள காப்பகத்திற்கு பரிந்துரை கடிதம் அளிக்கப்பட்டது. அந்தக் கடிதத்துடன் மாரிஸ்வரி, தனது மகளுடன் காப்பகத்திற்கு சென்றபோது மனவளர்ச்சி குன்றிய குழந்தை தனக்கான பணிகளை தானே செய்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என காப்பக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.