மதுரைபுதுத்தம் சாலை, ஜெயபாரத் ஹோம்ஸ் குடியிருப்புப்பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகள் ஷிவானி, பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்பாண்டியன் ஆகியோர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கேவ் நகரில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
தற்போது உக்ரைன் நாட்டில் போர் ஆரம்பித்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாணவர்களை பத்திரமாக மீட்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகரிடம் மாணவர்களின் பெற்றோர் நேற்று(பிப்.26) மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோபாலகிருஷ்ணன், “தனது மகள் கடந்த இரண்டு தினங்களாக இரவு எங்களிடம் தொடர்ந்து போனில் பேசி வருகிறார். தற்போது, மருத்துவ மாணவர்கள் தங்கியிருக்கும் இடம் அருகே குண்டு மழை பொழிவதால் பதற்றமான சூழ்நிலையில் இருப்பதாகக் கூறினார்.