தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வன்னியர் உள் இடஒதுக்கீடுக்கு எதிரான மற்றொரு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றம் - வன்னியர் உள்இடஒதுக்கீடு சட்ட மசோதா

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய மற்றொரு வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

highcourt madurai bench
உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

By

Published : Apr 1, 2021, 10:04 PM IST

மதுரை:கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமர்நாத், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு (எம்பிசி) மொத்தமாக 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வரும் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியது. இதற்கு தமிழ்நாடு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் (எம்பிசி) மொத்தமாக உள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

68 சமூகத்தைக் கொண்ட சீர்மரபினர்களுக்கு 7 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 2.5 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், 40 சமூகத்தைச் சேர்ந்த மக்களின் கல்வி, வேலை அனைத்தும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும், அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஒதுக்கீடு வழங்க இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

ஏற்கனவே, இதே கோரிக்கையை வலியறுத்தி 6 வழக்குகள் சென்னை உயர் நீதமன்றம் முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கையும் இணைத்துள்ளனர்.

இதையும் படிங்க:சேந்தமங்கலத்தில் பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்க டோக்கன் விநியோகம்!

ABOUT THE AUTHOR

...view details