தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திராவிடர் கழகம் ஜனநாயகத்திற்கு எதிரானது என உத்தரவிடக்கோரி மனு தாக்கல்! - Petition Against Triavidar Party

மதுரை: திராவிடர் கழகத்தை ஜனநாயகத்திற்கு எதிரானது என அறிவித்து, அதன் உடமைகளை பறிமுதல் செய்ய உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Petition Against Driavidar Party
Petition Against Driavidar Party

By

Published : Aug 4, 2020, 7:44 AM IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கனகராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ்க் கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோக்கள் பதிவிடப்பட்டன. சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்கி வீடியோக்களை பதிவிட எந்தக் கட்டணமும் தேவை இல்லை என்பதால் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்துவருகின்றன.

இது திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவாகவே உள்ளது. திராவிட கழகம் இந்து மக்களையும் அவர்தம் எண்ணங்களையும் புண்படுத்திவருகிறது. இந்து சமூகத்தைப் பின்பற்றுபவர்களை அச்சுறுத்தும்வகையில், இதுபோன்ற செயல்களை திராவிடர் கழகம் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது.

இதுதொடர்பாக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, திராவிட கழகத்தின் பொதுச்செயலர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், திராவிட கழகத்தை ஜனநாயகத்திற்கு எதிரானது என அறிவித்து, அதன் உடமைகளை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details