தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தரமற்ற ரேஷன் அரிசியால் எம்எல்ஏவிற்கு ஆரத்தி! - சட்டப்பேரவைத் தேர்தல்

மதுரை: ரேஷன் கடையில் போடப்படும் அரிசியை ஆரத்தி தட்டில் வைத்து ஓட்டு கேட்க வந்த சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுமக்கள் வரவேற்றனர்.

ரேஷன் அரிசியால் ஆர்த்தி: அதிர்ந்து போன அதிமுக வேட்பாளர்!
ரேஷன் அரிசியால் ஆர்த்தி: அதிர்ந்து போன அதிமுக வேட்பாளர்!

By

Published : Mar 16, 2021, 2:12 PM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தண்டலை கிராமத்தில் அத்தொகுதியின் தற்போதைய அதிமுக எம்எல்ஏவும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளருமான மாணிக்கம் பொதுமக்களிடம் நேற்று (மார்ச் 15) வாக்கு சேகரித்தார்.

அப்போது தண்டலை ஊராட்சிக்கு உள்பட்ட சேவக்காடு பகுதியில் வாக்கு சேகரித்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கடையில் போடப்பட்ட தரமற்ற அரிசியை கொண்டு அவரை ஆரத்தி எடுக்க முற்பட்டனர்.

ரேஷன் அரிசியால் ஆர்த்தி: அதிர்ந்து போன அதிமுக வேட்பாளர்!

அப்போது அருகில் இருந்த அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் அப்பெண்களிடம் சமரசம் மேற்கொண்டனர். பின்னர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் வாக்குறுதி அளித்த போதும், பொதுமக்கள் ஆரத்தி எடுப்பதில் விடாப்பிடியாக நின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் வரை குழப்பமும் பரபரப்பும் நீடித்தது.

இதையும் படிங்க...முதலமைச்சரின் ஷாக் நியூஸ் முதல் துரைமுருகனின் கலாய்வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

ABOUT THE AUTHOR

...view details