மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ளது அடைக்கம்பட்டி கிராமம். சுமார் 350 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்திற்குச் செல்கின்ற பாதையை மறைத்து ரயில்வே நடைபாதை சுற்றுச்சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் சிறு வாகனங்கள் கூட ஊருக்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் ரயில்வே நடைபாதை சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தண்டாவளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் ஊருக்குள் செல்வதற்குப் பாதை அமைத்துக் கொடுத்த பிறகே பணிகளை தொடர அனுமதிப்போம் என்றும் இல்லாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினர்.