மதுரை தெற்கு மாரட் வீதியில் கடந்த 10 நாட்களாக குடி தண்ணீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - People protest
மதுரை: குடி தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தெற்குமாரட் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
protest
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.