தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை மலர் சந்தையில் மலைபோல குவிந்த கழிவுகளால் பொதுமக்கள் அவதி - Madurai Special

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மலைபோல் குழிந்துள்ள கழிவுகள் முகம் சுளிக்க வைப்பதாக பூ வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை மலர் சந்தை
மதுரை மலர் சந்தை

By

Published : Jul 30, 2022, 12:58 PM IST

மதுரை:மாட்டுத்தாவணி மலர் சந்தையில்குவிந்துள்ள கழிவுகளை அகற்றக்கோரிமாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பூ வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மலர்க் கழிவுகளை முறையாக அகற்றக் கோரிக்கை

மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் வந்து செல்கின்றனர். இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு மலர்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தினமும் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் பல நாட்களாக அகற்றப்படாமல் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது இது தங்களை முகம் சுளிக்க வைப்பதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது என வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று வியாபாரிகளும்,பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆடி அமாவாசை - மதுரையில் கருப்பண்ணசாமி சன்னதி கதவுகளுக்கு சிறப்பு பூஜை

ABOUT THE AUTHOR

...view details