தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முகக்கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியம் - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மதுரை: பெரும்பாலான பொதுமக்கள் முகக்கவசம் அணிவதிலும், தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதிலும் அலட்சியம் காட்டுகின்றனர் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Radha Krishnan latest press meet
Radha Krishnan latest press meet

By

Published : Jul 6, 2020, 8:42 PM IST

மதுரை மாவட்டத்தில் கரோனா தோற்று அதிகரித்துவரும் நிலையில், கரோனா அரசு மருத்துவமனைகள் மற்றும் கரோனா கவனிப்பு (கேர்) மையங்களை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், "கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை, அவர்களை சமூகத்தில் விலக்கிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இந்தியாவிலயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக நாளொன்றுக்கு 35 ஆயிரத்திக்கும் மேலான மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறோம். மேலும், மதுரை மாவட்டத்தில் சிகிச்சை முகாம்களை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளோம்.

கரோனா அறிகுறி இல்லாமல் பாதிப்புக்குள்ளாகியவர்களின் (asymptomatic) வீடுகளில் தனி கழிப்பறை இருந்தால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கபடுவர்" என்றார்.

தொடர்ந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசிய அவர், "மதுரையில் முகக்கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கின்றனர். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

கரோனா வைரஸ் தொற்று சுனாமி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் போன்றது, அதனை எதிர்கொள்வது சவாலானது, எனவே கரோனாவை தடுக்க நிலையான மருந்து கண்டறியும் வரை ஓராண்டிற்கு பொதுமக்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி ஆகிய பழக்க வழக்கங்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

மேலும், கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையை மறைத்துக் காட்ட வேண்டிய நிலை அரசுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாரத் பெட்ரோலியம் திட்டம்... விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் கொடுந்துயரம்: ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details