மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவுக்குட்பட்ட சின்னபூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து (52) என்பவர், பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருமங்கலம் பகுதியில் பந்தல் அமைக்கும் பணியின்போது தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, திருமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை! - சின்னபூலாம்பட்டி
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி ஒருவர், மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
patient
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சையில் இருப்பதால் தனது தொழில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என புலம்பி வந்த மணிமுத்து, இன்று(ஜூன் 5) காலை மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப்பேருந்து மீது பைக் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு!