வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட அனுமதியில்லை...! - உயர் நீதிமன்றத்தில் பதில்
2019-04-23 14:14:50
மதுரை: வாகனங்களில் கட்சிக்கொடி கட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அனுமதியில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் தங்கள் வாகனங்களில் கட்சிக்கொடியைக் கட்டிக்கொள்ள அனுமதியில்லை எனவும், தலைவர்களின் படங்களை வாகனங்களில் வைத்துக் கொள்ளவும் அனுமதியில்லை எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தங்கள் பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்ளவும் அனுமதியில்லை என்றும் போக்குவரத்துத்துறை குறிப்பிட்டுள்ளது.