தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடிகார மகனை கொலை செய்து எரித்த பெற்றோர் - வெளியான சிசிடிவி காட்சி - Parents kill son, burn body in madurai Vaigai river

நாள்தோறும் மதுபோதையில் ரகளை செய்த மகனை சகித்துக் கொள்ள முடியாமல் பெற்றோரே அடித்துக் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தீ வைத்து எரித்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

குடிகார மகனை  கொலை செய்து எரித்த பெற்றோர் - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி
குடிகார மகனை கொலை செய்து எரித்த பெற்றோர் - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

By

Published : Jan 29, 2022, 10:39 AM IST

மதுரை:மதுரை வைகையாற்றில் சாக்கு மூட்டையில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற கரிமேடு காவலர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக நடைபெற்ற தொடர் விசாரணையில் இறந்தவர் மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த மணிமாறன் (42) என்பது தெரியவந்தது. இவர் மனைவியை பிரிந்து பெற்றோருடன் (முருகேசன்-கிருஷ்ணவேணி) வசித்து வந்துள்ளார்.

மணிகண்டன் நாள்தோறும் மது அருந்திவிட்டு தகராறு செய்வதைப் பொறுக்கமுடியாமல் தாங்கள் பெற்ற மகனையே கட்டையால் அடித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

குடிகார மகனை கொலை செய்து எரித்த பெற்றோர் - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

சிசிடிவியால் சிக்கிய பெற்றோர்

நிகழ்விடத்திற்கு அருகே கிடைத்த சிசிடிவி காட்சிகளை மூலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்தது.

தினமும் தகராறு செய்ததால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் தனது மனைவி கிருஷ்ணவேணியுடன் இணைந்து மகனைக் கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு சாக்கு மூட்டையில் கட்டி தன்னுடைய சைக்கிளில் வைத்துக் வைகை கரையோரம் போட்டுத் தீவைத்துக் கொளுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு முருகேசன் மற்றும் கிருஷ்ணவேணி இருவரையும் கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பெற்ற மகளை காப்பாற்ற கணவரை கொன்ற மனைவியை விடுவிக்க முடிவு?

ABOUT THE AUTHOR

...view details