கரோனா நோய்க் கிருமித் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதிவரை 40 நாள்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இச்சூழலில் அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் மட்டும் காலை 6 மணிமுதல் நண்பகல் ஒரு மணிவரை திறந்துவைப்பதற்காக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்ற பெண் கைது!
மதுரை: நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்ற பெண்ணை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இச்சூழலில், திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை பகுதியிலுள்ள தேனி சாலையில் காவல் துறையினர் தணிக்கைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு அறிவித்த நேரத்தை மீறி ஒரு கடை திறந்திருந்ததைக் கண்டு கடையில் விசாரணை செய்து சோதனை செய்தபோது, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருள்கள் விற்பனைசெய்தது தெரியவந்தது.
குட்கா பொருள்கள் விற்பனை செய்துவந்த சாந்தி (34) என்ற பெண்ணைக் காவல் துறையினர் கைதுசெய்து ரூ.12,500 மதிப்புடைய ஐந்து கிலோ எடைகொண்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல்செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.