தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும்' - பழனிவேல் தியாகராஜன் - பழனிவேல் தியாகராஜன்

மகளிர் உரிமைகளுக்கும் கல்விக்கும், சொத்துரிமை, சுயஉதவி குழுக்கள் போன்றவைகளில் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பழனிவேல் தியாகராஜன் பேச்சு
பழனிவேல் தியாகராஜன் பேச்சு

By

Published : Jun 18, 2022, 7:03 PM IST

மதுரை:தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் பெண்கள் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக "தொழிலணங்கு" என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்வில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் விருப்ப கடிதங்கள் வழங்கப்பட்டன. பால் காளான், மஞ்சள் பை, கடலை எண்ணெய், மசாலா பொருட்கள், புடவை, அப்பளம் ஆகியவைகளை கொள்முதல் செய்வதற்கான விருப்ப கடிதங்கள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

பழனிவேல் தியாகராஜன் பேச்சு

தொடர்ந்து விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தத்துவமும், கொள்கையும் எவ்வளவு முக்கியமே அந்த அளவிற்கு செயல்திறன் மிக முக்கியமானது.

23 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சுய உதவி குழுக்கள் இடையே ஏற்ற தாழ்வு இருக்கிறது. சில இடங்களில் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளது. சில இடங்களில் செயல்பாட்டில் இல்லை. சுய உதவிக் குழுக்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மதுரையை முன் மாதிரியாக கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு திட்டங்கள் கொண்டு வர உள்ளோம். மதுரையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

30 ஆண்டுகளாக வெளிநாடுகளில் உயர் பொறுப்புகளை வகித்து இருக்கிறேன். தமிழகத்தில் வளர்ச்சியை உருவாக்க அதன்மூலம் உலக நாடுகளில் இருந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதற்காக கடந்த 25 நாட்கள் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றேன்.

அதே சமயத்தில் மகளிர் உரிமைகளுக்கும் கல்விக்கும், சொத்துரிமை, சுயஉதவி குழுக்கள் போன்றவைகளில் மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும் என்பதை தெரிந்து கொண்டுள்ளோம்" எனப் பேசினார்.

இதையும் படிங்க:நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி பெண் நிர்வாகி மீது இந்து முன்னணி புகார்

ABOUT THE AUTHOR

...view details