மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை 8 சுற்றுகளாக இப்போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 674 காளைகள் போட்டியில் ஈடுபடுத்தப்பட்டன.
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - 18 காளைகளை பிடித்தவருக்கு முதல் பரிசு! - jallikattu 2020
17:31 January 15
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது. 18 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவர் முதலிடத்தை பிடித்தார்.
இந்தப் போட்டியில் 18 காளைகளை பிடித்த மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு பரிசாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட்டது. அதையடுத்து 17 காளைகளை பிடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு இரண்டாம் பரிசு ஒதுக்கப்பட்டது.
ஆனால், அந்த இளைஞர், காளைகள் பிடித்த கணக்கில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என பரிசை பெற மறுத்துவிட்டார். மூன்றாவது இடத்தை மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பிடித்து பரிசாக கேடயத்தைப் பெற்றார்.
இதையும் படிங்க:உடனுக்குடன்:பாலமேடு ஜல்லிக்கட்டு... காளையுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்!