தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாலமேடு ஜல்லிக்கட்டு வழக்கு தள்ளுபடி - palamedu jallikattu 2021 date

பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Dec 18, 2021, 7:14 PM IST

மதுரை மாவட்டம் பாலமேட்டைச் சேர்ந்த அழகு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.

இந்த விழாவை வழக்கமான விழாக் குழுவினர் நடுத்துவர். ஆனால், இந்தக் குழுவினர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி அனைத்து சமூக மக்களுக்கும் ஜல்லிக்கட்டில் சம உரிமை வழங்குவதில்லை. எனவே, விழாக்குழுவில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டும். இதில், நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதி திராவிடர்களைச் சேர்க்கக் கோரிய மனு

ABOUT THE AUTHOR

...view details