தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டிற்கு இதுவரை 649.4 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வருகை

மதுரை: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இதுவரை 649.4 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு இதுவரை 649.4 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வருகை
தமிழ்நாட்டிற்கு இதுவரை 649.4 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வருகை

By

Published : May 20, 2021, 10:08 PM IST

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.

இதனைச் சரி செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனுடன் ரயில்வே துறையும் இணைந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்ஸிஜன் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது.

தமிழ்நாட்டிற்கு தற்போது வரை 12 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து சேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து மூன்று பெட்டகங்களில் 64.95 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டு சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த ஆக்ஸிஜன் ரயில் இன்று (மே 20) மாலை 05.10 மணிக்கு வந்தடைந்தது.

தமிழ்நாட்டிற்கு இதுவரை 649.4 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வருகை

இதனையும் சேர்த்து இதுவரை ரயில் மூலம் 649.4 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவால் பலியான காவலர்களுக்கு இதுவரை 3.25 கோடி நிவாரணம்’ - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details