தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கோயில்களில் நியமிக்கப்பட்ட மாவட்ட குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிட உத்தரவு' - madurai highcourt branch

மதுரை: இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் 21 மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட மாவட்ட குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல், தகுதி, குற்ற சம்பவங்களில் தொடர்பு உள்ளவரா? உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Nov 20, 2020, 4:44 PM IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரிய நம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், அறங்காவலர்கள் குழு நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நியமனத்துக்கான அறிவிப்பை அந்தந்த கோயில்கள் முன்பு, அறிவிப்பாக வெளியிட உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று (நவம்பர் 20) விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்டுதான் கோயில்களில் அறங்காவலர் நியமிக்கப்படுவதாகவும், கோயில்களில் அறல்காவலர் குழு நியமனம் செய்ய 21 மாவட்டங்களில் மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதர மாவட்டங்களில் குழு அமைக்கப்பட இருக்கிறது என்றும் இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது, பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடையவர்கள், வழக்குகள் உள்ளவர்கள் நியமிக்கப்பட இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதைத் தொடர்ந்து, கோயில்களில் அறல்காவலர் குழு நியமனம் செய்ய 21 மாவட்டங்களில் மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் பட்டியல், கல்வி, ஆன்மிகத்தில் உள்ள பற்று, குற்ற சம்பவங்களில் தொடர்பு உள்ளவரா?, தகுதி உள்ளிட்ட விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details