தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெயலலிதாவுக்குப் பிறகு தனி கேரவன் வைத்துக்கொண்ட ஓபிஆர்! - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண வந்த ஓ. பி. ரவீந்திரநாத் குமாருக்கு தனி கேரவன்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காணவந்துள்ள தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் ஓய்வெடுக்க தனி கேரவன் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பிறகு தனி கேரவன் வைத்துக்கொண்ட ஓபிஆர்
ஜெயலலிதாவுக்கு பிறகு தனி கேரவன் வைத்துக்கொண்ட ஓபிஆர்

By

Published : Jan 17, 2020, 5:13 PM IST


உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மேடைக்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டுகளித்துவருகின்றனர்.

இதற்கிடையே தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தனது குடும்பத்தாருடன் மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ரசித்துவருகிறார். அவருக்காக மேடையின் பின்புறம் ஒரு கேரவன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஓபிஆர் ஓய்வெடுக்க கேரவன்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆளும் கட்சியின் அடுத்த அதிரடி

அவ்வப்போது அதில் ஓய்வெடுக்கவும் இயற்கை உபாதையைக் குறைக்கவும் தனது குடும்பத்தாரின் வசதியை கருதியும் இந்த கேரவன் ரவீந்திரநாத் குமாரின் குடும்பத்திற்காக தனிப்பட்ட முறையில் மேடைக்குப் பின்புறமாகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இது அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு பிறகு தனி ஒரு நபருக்காக கேரவன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க:

ஜல்லிக்கட்டு: காளையை அழைத்துவந்த இளைஞர் உயிரிழந்த சோகம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details