தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்கிய அலுவலர்! - etvbharat

இலங்கையைச் சேர்ந்த நபர்களுக்கு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்கிய விவகாரத்தில், கடவுச்சீட்டு அலுவலக மூத்தக் கண்காணிப்பாளர் உள்பட மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இலங்கைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோத பாஸ்போர்ட்
இலங்கைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோத பாஸ்போர்ட்

By

Published : Jul 14, 2021, 3:02 PM IST

மதுரையில் சட்டவிரோதமாக இலங்கையைச் சேர்ந்தவர்கள் நுழைந்தனர். இந்நிலையில் மதுரை மண்டலத்துக்குள்பட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தில் மூத்தக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் வீரபுத்திரன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்கியதாகப் புகார் எழுந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து சிபிஐ இந்தப் புகார் தொடர்பாக ரகசியமாக நடத்திய விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த நபர்களுக்கு இந்தியர்கள் எனச் சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்க மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தின் மூத்தக் கண்காணிப்பாளர் வீரபுத்திரன், டிராவல்ஸ் ஏஜென்சி நடத்திவரும் ரமேஷ் என்பவரின் துணையுடன் ரூ.45,000 பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து வீரபுத்திரன், முகவர் ரமேஷ், கடவுச்சீட்டு வாங்கியவர் என மூன்று பேர் மீது மதுரை சிபிஐ மூன்று பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த அலுவலரே பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'நீட் தேர்வில் விடை அளிக்கும் முறையில் மாற்றம்'

ABOUT THE AUTHOR

...view details