நித்யானந்தா கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து தினந்தோறும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொருளாதார மேம்பாட்டு அறிவிப்பு என கைலாசா நாட்டிற்கான நாணயங்கள், பணத்தை விநாயகர் சதுர்த்தியான நேற்று (ஆக.22) வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து இந்து நாடுகளோடு பொருளாதார ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், மதுரையில் உள்ள டெம்பிள்சிட்டி ஓட்டல் உரிமையாளர் குமார் என்பவர், கைலாசா நாட்டில் ஹோட்டல் திறக்க அனுமதி கோரி, நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.