தமிழ்நாடு

tamil nadu

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆதீனத்திடம் நிர்வாகம் ஒப்படைப்பு

மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஹரிஹரரிடம், ரகசிய அறையில் இருந்த நகைகள், சொத்து ஆவணங்கள், ரொக்கப்பணம் ஆகியவை ஒப்படைக்கப்பட்டன.

By

Published : Aug 17, 2021, 10:59 AM IST

Published : Aug 17, 2021, 10:59 AM IST

Updated : Aug 17, 2021, 11:44 AM IST

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை கே.கே. நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஆகஸ்ட் 13 அன்று இயற்கை எய்தினார். அவரது உடல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஆதீன சொத்துகள் ஆய்வு

இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், ஆதீனத்தின் உடலுக்கு கோவை காமாட்சிபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், இளைய மதுரை ஆதீனம் ஆகியோரும் அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

.

இதையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை மதுரை ஆதீனத்தின் 293ஆவது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகத்தினை தருமபுர ஆதீனம் முன்நின்று நடத்திவைத்து தீட்ஷையும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மதுரை ஆதீன மடத்தின் ரகசிய அறையில் இருந்த அசையும் அசையா சொத்துகளின் பத்திரங்கள், ரொக்கப் பணம், தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் எடுத்துப் பார்க்கப்பட்டது.

அருணகிரிநாதரின் அருந்தொண்டு

சரியாக இருப்பதாகக் கணக்கிட்ட பின்னர் அவை 293ஆவது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தொன்மையான சைவ ஆதீன மடங்களில் மிகவும் பழமையானது மதுரை ஆதீன மடம். இந்த ஆதீன மடம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த ஆதீனத்தின் பீடாதிபதியாக 1975ஆம் ஆண்டுமுதல் 2021 ஆகஸ்ட் 13 (கிட்டத்தட்ட 46 ஆண்டுகள்) ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இருந்துவந்தார். இவர் இருந்த காலத்தில் சைவ சமயத்திற்கும், தமிழ் மொழிக்கும் அருந்தொண்டாற்றினார் என்றால் அது மிகையல்ல.

மதுரை ஆதீனம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

ஐயப்பன் மலை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அருணகிரிநாதர், 'இந்த நாட்டிலிலுள்ள அனைவருக்கும் மதுரை ஆதீனத்தின் வேண்டுகோள், இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்' என வேண்டுகோள்விடுத்திருந்து கவனிக்கத்தக்கது.

அருணகிரிநாதர்

மேலும் அவர் பேசிய சிலவை:

  • நாட்டில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் இறைவனின் குழந்தைகள்தான். உலகத்தில் உள்ள 600 கோடி மக்களும் ஏக இறைவனின் குழந்தைகள்தான்.
  • இதைத்தான் இஸ்லாம் மார்க்கத்தின் தூதரான நபிகள் நாயகமும், கிறிஸ்தவத்தின் தூதரான ஏசு பிரானும் உலகிற்குச் சொன்னார்கள்.
  • ஆண்டவன் என்பவன் ஒருவன்தான். நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்தான் என்பதைத்தான் அனைத்து மதங்களும் நமக்குத் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அனைத்து அரசியல் தலைவர்களிடம் நட்புரிமை பாராட்டியவர் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்!

Last Updated : Aug 17, 2021, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details