இதுகுறித்து அம்மருத்துவமனையின் முதல்வர் ரத்தினவேல் நேற்று (ஜூன்.14) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மருத்துவக் கல்லூரி, நுண்ணுயிரியியல் கழகத்தில் கரோனா RT-PCR ஆய்வகம் கடந்த ஒன்றரை வருடங்களாக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
இதுவரை பதிமூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சமாக குறுகிய காலத்தில் பரிசோதனை முடிவுகள் அவரவர் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக (SMS) பெறும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது.
மேலும் பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்யவும், நகல் எடுக்கவும் வசதியாக இணைய தள முகவரியும் குறுஞ்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா நோய் தொற்று அறிய மாதிரிகள் கொடுப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் சொந்த பயன்பாட்டிலுள்ள அலைபேசி எண்ணையும் தெளிவாக குறிப்பிடவும்.