மதுரை: சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்த நிலையில் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "போலி பத்திரம் தயாரிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை. அதை ரத்துசெய்யும் அதிகாரத்தைப் பத்திரப்பதிவுத் துறையிலேயே செய்வதற்கு நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
மேலும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட போலி பத்திரங்கள், ஆள்மாறாட்டங்கள், அரசுக்குச் சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் எனப் போலியாகப் பதிவுசெய்துள்ளார்கள் என்பதால் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.