மதுரை:உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று(செப்.26) கோலாகலமாக துவங்கியது. இத்திருவிழா வரும் அக்டோபா் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் போது நாள்தோறும் பல்வேறு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.
முதல்நாள் விழாவில் அம்மன், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நவராத்திரி உற்சவ நாள்களில் மீனாட்சியம்மனின் மூலவர் சன்னிதியில் அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனைகள் போன்றவை நடத்தப்படமாட்டாது என்பதால், கொலு மண்டபத்தில் (உற்சவர்) அலங்காரத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு தேங்காய் உடைப்பு அா்ச்சனைகள் செய்யப்பட்டன.