தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு: தேசிய பாதுகாப்புக் குழு ஆலோசனை - மீனாட்சி அம்மன் கோயில்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தேசிய பாதுகாப்பு அலுவலர்கள் இன்று (ஆக. 04) நேரில் ஆலோசனை நடத்தினர்.

மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு
மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு

By

Published : Aug 4, 2021, 6:42 PM IST

மதுரை: இந்தியா முழுவதும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள நகரங்களில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்புக் குழு அலுவலர்கள் நேரில் ஆலோசனை வழங்குவது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் மதுரையிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மிக திருத்தலமான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அங்குத் தேவையான மாற்றங்கள், தேவையான அம்சங்கள் குறித்தும் தேசிய பாதுகாப்புக் குழு அலுவலர்கள் இன்று (ஆக. 04) ஆலோசனை மேற்கொண்டனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

தேசிய பாதுகாப்புக் குழு ஆலோசனை

அறநிலையத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர், காவல் துறையினருடன் இணைந்து மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பழைய திருமண மண்டபத்தில் தேசிய பாதுகாப்புக் குழு அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில்

தேசிய பாதுகாப்புக் குழுவினர் அளிக்கும் ஆலோசனைகளைப் பொறுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் மேலும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பக்தவத்சல பெருமாள் கோயிலில் மாயமான செப்புத் தகடுகள் பற்றி தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்'

ABOUT THE AUTHOR

...view details