நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கே.டி.சி.நகரில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
வெற்றி வியூகம்
முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மூலம் 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதிய தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் தேர்தல் பிரசாரத்தில் நேற்று அறிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் தனது இயலாமையை ஒப்புக் கொள்ளும் விதமாக நீங்களே ராஜினாமா செய்யுங்கள் என்கிறார்.
இதையும் படிக்கலாம்: 'செத்த எலி' விமர்சனம்: கட்டாருக்கு காங்கிரஸ் கண்டனம்
2021ஆம் ஆண்டில் மீண்டும் இந்த அரசை அமைத்து காட்டும் வகையில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இரும்புத்திரை போட்டு இந்த அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் இருந்து மறைத்து விடலாம் என கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். அதனை தகர்த்து உடைக்கும் தேர்தல் வியூகத்தை முதலமைச்சர் பழனிச்சாமி அமைத்துள்ளார்.