ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்று 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.
கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் முருகன், தெய்வானை, பால், பன்னீர், பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். பின் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் முன்னிலையில் விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
கோவில் குருக்ககள் ராஜா, ரமேஷ், செல்லப்பா, சிவானந்தம், சுப்பிரமணி உள்ளிட்டோர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிசம்பர் 9ஆம் தேதி மாலை 7 மணி அளவில் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.