தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏரி ஆக்கிரமிப்பு: நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர்

மதுரை: கொடைக்கானலில் ஏரியை ஆக்கிரமித்து பணம் சம்பாதிப்பவர்களை தடுத்து நிறுத்தக்கோரி தொடர்ந்த வழக்கில் நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொடைக்கானல் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

By

Published : Sep 23, 2019, 11:01 PM IST

கொடைக்கானல் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி. இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கொடைக்கானலின் மையப்பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரி முற்றிலும் கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமானதாகும்.

இந்த ஏரி அமைந்துள்ள இடத்தில், எட்டு சென்ட் பரப்பளவு உள்ள பகுதியை நகராட்சி நிர்வாகம் ஒரு தனியார் க்ளப்பிற்கு ஒத்திக்காக கொடுத்துள்ளது. ஆனால் அந்த க்ளப் 10 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் அப்பகுதியை ஆக்கிரமித்து கடைகள், கழிப்பறை போன்றவற்றைக் கட்டி வணிக நோக்கில் செயல்படுத்திவருகிறது.

150க்கும் மேற்பட்ட படகுகளை இயக்கி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவருகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: உதித் சூர்யா முன் ஜாமீன் கோரி மனு

ABOUT THE AUTHOR

...view details