மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக சிபிசிஐடி, முகிலன் உள்ளிட்ட 64 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதில் முகிலன் உள்ளிட்ட 6 பேர் மீதான விசாரணை, மதுரை மாவட்ட 4ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முகிலன் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு! - முகிலன்
மதுரை: முகிலன் உள்ளிட்ட 64 பேர் மீதுள்ள ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கை கூடுதல் அமர்வு நீதிமன்றம் வருகிற 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
madurai Court
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 58 பேர் மீதான வழக்கு மதுரை மாவட்ட 5ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முகிலன் மீது பாலியல் புகார் அளித்த முருகேஸ்வரி உள்ளிட்ட 11 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.
இதனை விசாரித்த நீதிபதி பாலகுமார், வழக்கில் தொடர்புடைய 58 பேரும் வருகின்ற அக்டோபர் மாதம் 16ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்திரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.