தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது ' - எம்.பி. சு. வெங்கடேசன்!

மதுரை: தேஜஸ் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படும் என்ற மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றும் மக்களின் குரலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

MP su venkatesan thank central govt for resume tejas train
MP su venkatesan thank central govt for resume tejas train

By

Published : Jan 7, 2021, 12:57 PM IST

பயணிகளின் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் சென்னை-மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. தென்னக ரயில்வேயின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்தன. மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும், மத்திய ரயில்வே துறை இந்த முடிவை கைவிட வேண்டும் என ரயில்வே துறைக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி முதல் சென்னை-மதுரை-சென்னை தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்விட்

இதனையடுத்து இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சு. வெங்கடேசன் எம்.பி., “தேஜஸ் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படும் என்ற மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மக்களின் குரலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மத்திய ரயில்வே அமைச்சருக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க எதிர்ப்புத்தெரிவிக்கும் மனு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details