மதுரை:இதுகுறித்து இன்று(அக்.24) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்து, ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டும் இணைய வகுப்பு நடத்துவதை கண்டித்து ரயில்வே அமைச்சருக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
அதில், ரயில்வே மருத்துவமனைகளில் புதிய நிர்வாக தகவல் அமைப்பு முறை அமல்படுத்துவதற்காக மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அந்த பயிற்சி அக்டோபர் 21 முதல் 29 தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. இதில் பயிற்று மொழியாக இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள ஊழியர்கள் ஒன்றும் புரியாமல் தவிக்கிறார்கள். பயிற்சியும் பயனற்றுப் போகிறது.