தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஐஐடி இட ஒதுக்கீடு: அமைச்சர் பதில் திருப்தி அளிக்கவில்லை -சு வெங்கடேசன் எம்பி - Madurai news

மதுரை: ஐஐடி பேராசிரியர் நியமனங்கள், படிப்புகளில் இட ஒதுக்கீடு தொடரும் என்ற அமைச்சரின் பதில் மட்டும் போதாது என்ற ஆய்வறிக்கையை நிராகரித்து சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சு வெங்கடேசன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு தொடரும் என அமைச்சர் பதில் திருப்தி அளிக்கவில்லை - சு. வெங்கடேசன் எம்பி
ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு தொடரும் என அமைச்சர் பதில் திருப்தி அளிக்கவில்லை - சு. வெங்கடேசன் எம்பி

By

Published : Mar 10, 2021, 10:48 AM IST

இது குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஐஐடி பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டைக் கைவிடுமாறும், சில பதவிகளுக்கும் மட்டுமானதாக சுருக்குமாறும் மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரைத்திருந்ததால் இட ஒதுக்கீடு தொடர்வது பற்றி அச்சம் நிலவுகிறது.

இந்தப் பின்னணியில் ஐஐடி இட ஒதுக்கீடு குறித்து நான் 'ஐஐடி இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்படுகிறதா' என்று எழுப்பிய கேள்விக்கு (நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண் 2137/08.03.2021) அமைச்சர் பதில் அளித்துள்ளார். அதில் 'இல்லை' எனத் தெரிவித்துள்ளார். மாணவர் அனுமதிகளில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர் பிரதிநிதித்துவம் உரிய அளவுகளில் உறுதி செய்யப்படுவது, ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டைக் கைவிடுகிற ஆய்வுக் குழு அறிக்கையை அரசு நிராகரிப்பது ஆகியவற்றை வலியுறுத்தி வருகிறேன்.

மத்தியக் கல்வி அமைச்சகம் அமைத்த ஆய்வுக் குழு அறிக்கை ஓர் நிச்சயமற்ற நிலையை, அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஐஐடி மாணவர்கள் சிலர் கவலையோடு என்னிடம் பேசி வருகிறார்கள். ஆய்வு அறிக்கை பரிசீலனையில் இருக்கிறது என்ற பெயரால் பேராசிரியர் நியமனங்களே மேற்கொள்ளப்படாமல் இழுத்தடிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளது.

பி.ஹெச்டி அனுமதிகளிலும் இட ஒதுக்கீட்டை அமலாக்குவது கட்டாயமானதாக இருக்க வேண்டியதில்லை என அந்த ஆய்வறிக்கை கூறியிருப்பதும் அவர்களின் கவலைக்கு காரணம். தற்போது அமைச்சர் இட ஒதுக்கீடு தொடர்கிறது என்று பதில் அளித்துள்ளார். பதில் மட்டும் போதாது. ஆய்வறிக்கையை உடனடியாக நிராகரித்து சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும். உடனே பேராசிரியர் பணி நியமனங்களை மேற்கொண்டு உரிய பிரதிநிதித்துவத்தை ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர்க்கு உறுதி செய்ய வேண்டும்" என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...17 வருடங்களுக்கு பின்னர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details