தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஸ்டாலினுக்கு மனோவியாதி' - எம் பி ரவீந்திரநாத் குமார் விமர்சனம் - மதுரையில் எம் பி ரவீந்திரநாத் குமார் செய்தியாளர் சந்திப்பு

மதுரை: பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், "குழந்தைகள் பாதுகாப்பு தினமாக ஜெயலலிதா பிறந்தநாளை அறிவித்துள்ளதை விமர்சித்த ஸ்டாலினுக்கு மனோவியாதி என்று நினைக்கிறேன்" என்று விமர்சித்தார்.

மதுரை விமானநிலையத்தில் எம் பி ரவீந்திரநாத் குமார் பேட்டி
மதுரை விமானநிலையத்தில் எம் பி ரவீந்திரநாத் குமார் பேட்டி

By

Published : Feb 24, 2020, 6:01 PM IST

மதுரை விமானநிலையத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கேள்வி:அகமதாபாத்தில் குடிசையை மறைப்பதற்காக ஏழு அடி சுவர் எழுப்பியதற்கு காரணம் என்ன?

பதில்: அமெரிக்காவின் அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது பெருமைக்குரிய விஷயம். நம்முடைய இந்தியாவின் வளர்ச்சிக்காக இரு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அதற்காக வரவேற்பு கொடுக்கும் பொருட்டே அவ்வாறு செய்யப்பட்டது.

மதுரை விமானநிலையத்தில் எம் பி ரவீந்திரநாத் குமார் பேட்டி

கேள்வி: என்பிஆர் குறித்து முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதம் பற்றி பாராளுமன்றத்தில் பேசப்படுமா?

பதில்: முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து பாராளுமன்ற கூட்டத்தில் பேசுவேன்.

கேள்வி: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்பட்டதை, ஸ்டாலின் விமர்சனம் செய்தது?

பதில்:பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்டது தான் தொட்டில் குழந்தை திட்டம். அந்த திட்டத்திற்காகஅன்னை தெரசாவால் ஜெயலலிதா பாராட்டுப் பெற்றார். ஸ்டாலினுக்கு மனோவியாதி என்று நினைக்கின்றேன். அவர் எதற்கெடுத்தாலும் குறை சொல்கின்றார் என்று கூறினார்.

இதையும் படிங்க:

கோடையின் தாக்கத்தைச் சமாளிக்கும் உயிரியல் பூங்கா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details