தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

' மத்திய அரசு ப.சிதம்பரத்தின் ஆலோசனையைக் கேட்க வேண்டும்' - நவாஸ் கனி எம்.பி! - madurai airport

மதுரை: மத்திய அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த ப.சிதம்பரத்தின் ஆலோசனையைக் கேட்க வேண்டும் என விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.

madurai airport

By

Published : Oct 18, 2019, 8:43 AM IST

மதுரை விமான நிலையத்திற்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வருகை புரிந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் நவாஸ் கனி பேசுகையில், 'முன்னாள் நிதியமைச்சர், பொருளாதார மேதை ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது, மத்திய அரசு பழி வாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

ஆனால், அவர் விரைவில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு சட்டப்படி வெளியே வருவார். டி.கே.சிவகுமார், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது தொடரும் நடவடிக்கைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் தான் நடைபெறுகின்றன. நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில், ப.சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளின் ஆலோசனைகளை, மத்திய அரசு கேட்டு முன்னேற்ற வழியை மேற்கொண்டு, வியாபாரத்தை பெருக்கி, வேலைவாய்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் கனி எம்.பி.

மேலும், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் , விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் அமோக வெற்றி பெறுவார்கள்' என கூறினார்.

இதையும் படிங்க: ப. சிதம்பரத்தை மீண்டும் கைது செய்வதா? தமிழ்நாடு காங்கிரஸ் கடும் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details