ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை களம் கடும் சூடுபிடித்துள்ளது. இதில் நேற்று காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணகிரி, சேலத்தில் பரப்புரை மேற்கொண்டார்.