மதுரை:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
கலைஞர் நூலகம்: கட்டுமானப் பணிகள் இடம் தேர்வு செய்யப்பட்ட போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்டுமானப் பணிகளை இன்று (ஜுன். 7) மாலை முதல் முறையாக நேரில் பார்வையிட்டார்.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், மூர்த்தி, பெரிய கருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர், ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:லிலிபெட் டயானாவின் பிறந்தநாள் புகைப்படம்... நீல நிற ஆடையில் புன்னகைக்கும் தேவதை...!