மதுரை: மதுரை பாண்டிகோயில் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார்.
அப்போது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கி பேசிய அவர், “எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றினேன். நான் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு ஒரு தொண்டனாக உழைக்க காத்திருக்கிறேன். எத்தனையோ பேரை அமைச்சர்கள் ஆக்கினேன். அத்துனை பேரும் நன்றியில்லாமல் போய்விட்டனர்.