தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையா! பரபரக்கும் தேர்தல் அரசியல் களம்

மு.க. அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களுடன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதையடுத்து தேர்தல் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

mk azhagiri political stand
mk azhagiri political stand

By

Published : Nov 16, 2020, 2:33 PM IST

Updated : Nov 16, 2020, 3:42 PM IST

மதுரை:முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் முன்னாள் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த மு.க அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மதுரையிலுள்ள அவரது ஆதரவாளர்களிடம் உறுதிபடுத்தப்பட்ட தகவலை தெரிவித்துள்ளனர்.

நினைச்சத முடிப்பேன்; நானும் கருணாநிதி புள்ளதான் - முக அழகிரி

அடுத்த சில நாட்களில் முக அழகிரி மதுரையிலுள்ள தனது ஆதரவாளர்கள், விசுவாசிகளை ஒருங்கிணைத்து தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாக புரளிகள் வெளியானது. மதுரையைச் சேர்ந்த உள்ளூர் பாஜக பிரமுகர்கள், அழகிரி பாஜகவுக்கு வந்தால் தாங்கள் வரவேற்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். நடிகர் ரஜினிகாந்தின் பல்வேறு அறிவிப்புகளுக்கு முக அழகிரி ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு க அழகிரி

நடிகர் ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து முரண்பட்ட தகவல்கள் நிலவுவதையடுத்து அழகிரி இந்த முடிவினை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தனிக்கட்சி தொடங்குகிறாரா அல்லது வேறு ஏதேனும் கட்சியில் இணைய உள்ளாரா என்பது குறித்து அந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் முடிவு அறிவிக்க கூடும் என்பதால் தமிழக தேர்தல் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Last Updated : Nov 16, 2020, 3:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details