மதுரை வில்லாபுரம் பகுதி திமுக நிர்வாகியான எஸ்.ஆர்.மருது அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று அவரது வீட்டிற்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மருதுவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
’வரும் தேர்தலில் என் பங்கும் இருக்கும்’ - மு.க.அழகிரி - தயாநிதி அழகிரி
மதுரை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய பங்கும் இருக்கும் என்றும், போகப்போக தனது முடிவு தெரியும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
alagiri
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” வரும் சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்களிப்பும் இருக்கும். விரைவில் ஆதரவாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்து எனது முடிவை அறிவிப்பேன். போகப்போக எனது முடிவு தெரியும். அமித்ஷாவை நான் சந்திக்கப் போவதாக பரவிய வதந்தி போலதான், என் மகன் தயாநிதி அழகிரிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக வரும் செய்தியும் “ என்றார்.
இதையும் படிங்க: மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த சந்தோஷ் பாபுவுக்கு கமல்ஹாசன் பாராட்டு
Last Updated : Dec 1, 2020, 2:22 PM IST