தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரி, தற்போது எந்த அரசியல் நடவடிக்கையும் இன்றி அமைதியாக இருந்து வருகிறார். தனது ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்று அவர்களோடு சந்தித்து உரையாடுகிறார்.
இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டல தலைவராகவும், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளருமான இசக்கி முத்து விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
தனது ஆதரவாளரான இசக்கி முத்துவை அமைச்சர் மு.க.அழகிரி மதுரை கொடிக்குளம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.தொடர்ந்து இசக்கிமுத்துவின் மருத்துவ செலவுக்கு பண உதவி அளித்தார்.
தொடர்ந்து மு.க.அழகிரியிடம் மீண்டும் மத்திய அமைச்சராக வர வாய்ப்புள்ளதா, மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதா, உதயநிதியும், துரை தயாநிதியும் இணைந்து செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் எந்தக் கேள்விகளுக்கும் பதிலும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க:என்ன செய்ய போகிறார் ஓபிஎஸ்...புதிய நிர்வாகிகளை நியமித்து பொதுக்குழு நடத்த திட்டம்