மதுரை:தி.மு.க.,வின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி திமுகவிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில். தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என தெரிவித்த அவர், வரும் ஜன., 3ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஆதரவாளர்களுக்கு அழைப்புவிடுத்த அழகிரி!
திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து தன் ஆதரவாளர்களுடன் அடுத்த மாதம் 3ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்க ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த ஆலோசனைக் கூட்டம், ஜன., 3ஆம் தேதி மாலை, மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதிலுமுள்ள என் ஆதரவாளர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மதுபோதையில் திமுக தொண்டர்கள் மோதல்: சமூக வலைதளங்களில் பரவும் காட்சி!