தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிந்தாமல், சிதறாமல் வாக்களியுங்கள்- செல்லூர் ராஜூ - BJP

நெற்கதிர் போல் ஒரு வாக்கு கூட சிந்தாமல், சிதறாமல் வாக்கு சாவடிக்கு கொண்டு வந்து உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Minster sellur raja campaign supporting madurai ADMK candidate

By

Published : Apr 16, 2019, 7:47 PM IST


மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ளன. இதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் இறுதிகட்ட பரப்புரை தீவிரமடையும் நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து மதுரை புதூர் பேருந்து நிலையத்திலிருந்து இரு சக்கர வாகன பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய அவர், இந்திய நாட்டிற்கு ஒரு வலிமை மிக்க தலைவர் வேண்டும். நமக்கு பாதுகாப்பு தரக்கூடிய வலிமைமிக்க தலைவராக மோடியை விளங்குவதை பால்கோட் தாக்குதலில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது என தெரிவித்தார்.

மேலும், நெற்கதிர் முற்றி நெல் அறுவடைக்கான நேரம் இது. ஒரு வாக்கு கூட சிந்தாமல், சிதறாமல் வாக்குச் சாவடிக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டியது உங்களின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details