மதுரை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் (16) என்ற சிறுவன் மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
3ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை; 16 வயது சிறுவன் கைது - மூன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை
மதுரை: மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 16 வயது சிறுவனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
![3ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை; 16 வயது சிறுவன் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3572229-thumbnail-3x2-molest.jpg)
MINOR BOY ARRESTED FOR MOLESTING GIRL IN THIRD CLASS
இந்நிலையில் சிறுவன் ஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்த மதுரை தெற்கு காவல் துறையினர். அதனையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிறுவனை முன்னிறுத்திய காவல் துறை, பின் திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.