தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’அழகிரி புயலால் திமுகவுக்கு பாதிப்பு’ - புரெவி புயல்

மதுரை: மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

udhayakumar
udhayakumar

By

Published : Dec 2, 2020, 12:02 PM IST

Updated : Dec 2, 2020, 12:35 PM IST

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ ‘புரெவி’ புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அரசு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புயல்கள் வருவதற்கு முன்னரே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புயல் வரும்போது முதலமைச்சர் சூறாவளியாக சுழன்று நடவடிக்கைகள் எடுத்தார். கரோனா காலகட்டத்தில் திமுகவினர் களத்திற்கே வரவில்லை. ஆனால், தமிழக அரசு களத்தில் தீவிரமாக பணியாற்றியதால் கரோனா குறைந்து வருகிறது.

1,295 கோடி ரூபாய் மதிப்பில் முல்லை பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை டிசம்பர் 4 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இப்புதிய திட்டத்தால் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தேவை நிறைவாகும்.

மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்

மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என மக்கள் பேசுகிறார்கள் “ எனக் கூறினார்.

இதையும் படிங்க: ’வரும் தேர்தலில் என் பங்கும் இருக்கும்’ - மு.க.அழகிரி

Last Updated : Dec 2, 2020, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details